கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த 3 சீன நாட்டவர்களை தாக்கி, அவர்களில் ஒரு சீனரை கடத்தி சென்று கொலை செய்த குற்றம் தொடர்பில் தேடப்படும் 3 சீன சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த 2026.07.23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குற்றம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குற்றத்துடன் தொடர்புடைய 2 சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மேலும் 3 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த 3 சீனர்களும் நாட்டில் தங்கியுள்ளதுடன், சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி சந்தேகத்துக்குறிய சீன நாட்டவர்கள் மூவரும் விமானம் அல்லது கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதால், இந்த 3 சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின், நிலைய பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு – 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here