இலங்கை மத்திய வங்கிக்கும் சீன மக்கள் வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தம் மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை, தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த மாதம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
10 பில்லியன் சீன யுவான் அதாவது 1.4 பில்லியன் டோலர் நாணய பரிமாற்ற வசதி மூலம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள நிதி ஒத்துழைப்பு நிரூபிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.








