இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் – Child Rights Act – வரைவை விரைவுப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் மாநாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக, இந்த புதிய சட்டம் உறுதி செய்யும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 பெப்ரவரியில் “Rights of Child Compact Act” என்ற பெயரில் சட்டம் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் தற்போது அதன் பெயர் “Child Rights Act” – சிறுவர் உரிமைகள் சட்டம் என மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய மேலதிக பகுதிகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட கருத்துரு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்ட வரைஞர் திணைக்களம் ஏற்கனவே வரைவு பிரேரணை மீதான பணிகளை ஆரம்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட கருத்துரு ஆவணத்தின் அடிப்படையில் சட்ட வரைஞரை, சட்டத்தை விரைவாக பூர்த்தி செய்ய அதிகாரம் வழங்கி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனையை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அமைச்சரவைக்கு சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here