முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததன் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் உள்ள பண்டார, அவரது உடல்நிலை காரணமாக நேற்று (21) சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு அரச நிறுவனங்களிடமிருந்து ஊதியம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் பண்டார கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here