முன்னாள் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே காவலில் இருந்த சந்தர்ப்பத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, இன்று (16) குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
இதேவேளை சுரேஷ் சாலே வைக்கப்பட்டிருந்த அறையை ஆணைக்குழு பரிசோதித்துள்ளதோடு காற்றோட்டம் இன்மை உட்பட பல அடிப்படை குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டன. இது தொடர்பில் CID-க்கு ஆணைக்குழு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அருகிலிருந்த கைதிகள் மற்றும் CID அதிகாரிகளிடமும் ஏற்கனவே வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் உள்ள சாலேவுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகளையும் ஆணைக்குழு கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








