அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்பின் சூழ்நிலையை பொறுத்து புதிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த திட்டம் 3 மாதங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட காலத்தில் சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு, உள்ளூர் விலை மீதான தாக்கம் மற்றும் மக்கள் மீதான சுமை தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சலுகைகள் 3 மாதங்களின் நிறைவடைய உள்ள போதும், அதனைத் தொடர்ந்து எதிர்பாராத சூழல் ஏற்பட்டால், அதை எதிர்கொண்டு தேவையான நிதியை திரட்ட நாம் தயாராக இருக்கிறோம்” என பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஜூன் 8 வரையான வருமான சேகரிப்பு, எதிர்பார்த்த இலக்கை விட 120% ஆக அதிகரித்துள்ளதாகவும் “எனவே சில எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொண்டு நிர்வகிக்க அரசாங்கத்துக்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சலுகை ஜூன் முடிவில் காலாவதியாகும் அதே நேரத்தில், எதிர்பாராத தருணங்களுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், எதிர்கால நிவாரணம் குறித்த தீர்மானங்கள் அந்த நேரத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்திய மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் விலை அதிகரித்ததோடு, நாட்டிலும் எரிபொருள் விலை அதிகரித்தது.

எவ்வாறாயினும் தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here