தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.

இவர் வசித்து வந்த வீட்டை பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் பானு சந்தர் பெருந்தொகைக்கு வாங்கி உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் த்ரிஷா சென்னையில் அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு தற்போது, வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விடயம் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்த த்ரிஷா, கடைசியாக விஜயின் லியோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்ததுடன் சமீபத்தில், GOAT படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பல ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.

தற்போது, இவர் தல அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here