மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சோதனை செய்ய முயன்ற போது, பொலிஸாரை வாளால் தாக்க முயன்ற நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலியந்தல, போகுந்தர பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் வாளால் பொலிஸாரை தாக்க முயன்றதால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here