தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்த 10 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 1,100-க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here