முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடல் கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய விக்கிரமரத்ன, 2026 ஜூலை 17ஆம் திகதி அவரது வீட்டில் துப்பாக்கி காயத்துடன் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டார்.

இது தற்கொலை சம்பவம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தன்னை சுட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை (20) முழு பொலிஸ் மரியாதையுடன் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here