ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று நேற்று (26.09.2024) இடம்பெற்றது.
இக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.









