பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆனையிறவு சோதனைச்சாவடியில்  நேற்று(27.09.2024) காலை 10.00மணியளவில்  மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது நான்கு கிலோ 40கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு  திருமுறுகண்டி பகுதியைச்சேர்ந்த 18மற்றும் 25 வயதான இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பளைப்பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here