யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25.09.2024) உயிரிழந்துள்ளார்.

1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் வயது – 36 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் – பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன் மீது இவரது மோட்டார் சைக்கிள் கைப்பிடி தட்டுப்பட்டது. இந்நிலையில் அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.

அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை (25.09.) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here