சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கான அரச விஜயத்திற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் உள்ள முக்கிய அமைச்சுக்களை மேற்பார்வையிட ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாதுகாப்பு அமைச்சராக
பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக டாக்டர் பிரசன்ன குமார குணசேன.








