டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு `NDCU` நேற்று `17` வரை வெளியிட்ட அறிக்கைக்கமையை இந்த ஆண்டு இதுவரை மொத்தமாக 74,478 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஜூலை முதல் 17 நாட்களில் மாத்திரம் 19,100 பேர் வரையில் டெங்கு நோயுடன் பதிவாகியுள்ளனர்.

தற்போது மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இதேநேரம் நாட்டில் கம்பஹா மாவட்டத்தில் (15,596) அதிகளவான டெங்கு பரவியோர் பதிவாகியுள்ளனர்.

பொதுமக்கள் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here