பிரபல ஆடை வர்த்தக நிறுவனமான “House of Fashions” உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை சுங்க விசாரணையின் போது ஏற்பட்ட இதயம் தொடர்பான உடல்நல பிரச்சனை காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்தபோது ஜயவர்தனவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என இலங்கை சுங்க பிரிவின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்ததாக  பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர் கொழும்பு பிரதான நீதவான், வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தேகநபரை பார்வையிட்டு, அவரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டார் என புஞ்சிஹேவா  தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை சுங்க மதிப்பீடு தொடர்பானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here