அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக உங்கள் வரலாற்று சிறப்புமிக்க பதவியேற்பிற்கு எனது அன்பு நண்பர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நமது இரு நாடுகளுக்கும் பயனளிப்பதற்கும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகள் என தெரிவித்தார்.








