இந்நாட்டு நேரப்படி நேற்றிரவு இடம்பெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் குழு 2 அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11.05 மணிக்கு இடம்பெற்றது. அருண தர்ஷன போட்டித் தூரத்தை 44.75 செக்கன்களில் முடித்து 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டமாக பதிவாகியிருந்த நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here