2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் (Ordinary Level) 225,748 மாணவர்கள் உயர் தரத்துக்கு செல்ல (Advanced Level) தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து அறிவிப்பதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதைத் தெரிவித்தார்.
அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 11,790 என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு குறித்த பாடங்களில் 70.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு இது 69.07% ஆக இருந்தது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு கணித பாடத்தில் 72.03 வீதமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு இது 71.06% ஆக இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.







