பெண்கள் அனைவரும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகத்தை பளபளப்பாக்க குளிப்பதற்கு முன் இந்த 4 பொருட்களை முகத்தில் தடவினால் போதும்.
- மஞ்சள்
தினமும் குளிப்பதற்கு முன் மஞ்சளுடன் உளுந்து மாவை முகத்தில் தடவவும்.
பின் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் சருமம் பளபளக்கும்.
- வெள்ளரிக்காய்
வெள்ளரியின் சாறு சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை குளிப்பதற்கு முன் தோலில் சிறிது நேரம் தடவவும்.
- முல்தானி மிட்டி
தினமும் குளிப்பதற்கு முன் முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டரை கலந்து தடவலாம்.
முல்டாமி மிட்டி முகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- சந்தனம்
சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டரை கலந்து குளிப்பதற்கு முன் முகத்தில் தடவவும்.
இது முகத்திற்கு அதிக குளிர்ச்சியை தரும்.








