இலங்கையில் தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு, விகிதத்தை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஏப்ரல் மாதத்திற்கான திணைக்களத்தின் அறிக்கையில் தனிநபர் மாதாந்தச் செலவு ரூ. 17,117 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதத்தின் செலவீனத்துடன் ஒப்பிடுகையில் 427 ரூபாய் அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்ச செலவீனமாக கொழும்பு மாவட்டத்தில் ரூ. 18,461 பதிவாகியுள்ளதுடன் குறைந்தபட்ச செலவீனமாக மொனராகலை மாவட்டத்திற்கு 16,367 ரூபாய் பதிவாகியுள்ளது.
உணவு, வீட்டுவசதி போன்றவற்றை முகாமைத்துவம் செய்ய மாத்திரமே ஒரு நபருக்கான குறைந்தபட்ச மாதாந்திர செலவு 17,117 ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு தனிநபர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு, உத்தியோகபூர்வ வறுமைக் கோடாக (Official Poverty Line) கணக்கிடப்படுன்கிறமை குறிப்பிடத்தக்கது.







