நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த அறிவிப்பை தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (28.05.2025) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








