வல்வெட்டித்துறை நகரசபைக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சந்திப்பு இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியில் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் அவரது தலமையில் இடம்பெற்றது.

இத் தேர்தலில் திரு சறீகாந்தா, சிவாஜிலிங்கம்  ஆகியோரின் தமிழ்த்தேசிய கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் பாரளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திர குமார் பொன்னம்பலம், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் ஆகியோர் அடங்கியதமிழ்த்தேசிய கொள்கை அடிப்படையாகக் கொண்ட திரு.K.V.தவராச, திரு.அருந்தவபாலன், திரு.ஐங்கரநேசனை உள்ளடக்கிய கூட்டாகிய தமிழ்த்தேசிய பேரவையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இதில் சிறப்பாக தமிழ்த்தேசிய போரட்டத்தின் தாய் மண் வல்வெட்டித்துறையில் நகரசபை முதன்மை வேட்பாளராக கௌரவ முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம் தலைமையில் முன்னாள் பெண் போரளி, பல்கலைக்கழக மாணவன்,ஓய்வுபெற்ற அதிபர்,பட்டதாரி ஆசிரியர், முன்னால் நகரசபை உறுப்பினர்கள்,மற்றும் பல சமூக மட்ட அமைப்புகளின் சமூக சேவகர்கள், இளைஞர்கள், பெண்கள், விளையாட்டு வீரர்கள் அடங்கிய வல்வை வாழ் தமிழ்த்தேசிய பற்றாளர்கள் போட்டியிடுகின்றனர்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here