சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரா தற்போது உள்ளவரே தொடர்ந்தும் இருப்பார் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் கே.ரஜீவ் பதில் வைத்திய அத்தியட்சராக தொடர்ந்தும் பணிபுரிவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.







