அம்பலாங்கொட, போகஹவத்த, கந்த மாவத்தை பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நேற்று இரவு 9.30 மணி அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் கிரிக்கட் வீரர் மரணமடைந்துள்ளார்.

வீட்டிற்கு அருகில் உள்ள வெற்று நிலத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் நடந்தே தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக உயிரிழந்தவர் வீட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த நபர் முன்பு வெளிநாட்டில் இருந்ததாகவும், மீண்டும் வெளிநாடு செல்லும் நோக்கில் தற்போது இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய வீட்டின் அருகே உள்ள வெற்று நிலத்தில்  சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக வீட்டில் இருந்த ஒருவர் சொன்னதை அடுத்து தம்மிக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

உயிரிழந்தவர் இறுதிச் சடங்குகளில் சூதாட்டம் நடத்தும் நபர் எனவும்,  சிறிது காலத்திற்கு முன்பு ஏற்பட்ட சூதாட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கு முன்னரும் இவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here