தான்சானியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 155 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 236 பேர் காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தான்சானியா முழுவதும் வீசிய பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களனின் எண்ணிக்கை 2 இலட்சத்தையும் தாண்டியுள்ளது.

சுமார் 200,000 பொதுமக்கள் மற்றும் 51,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக 10,000ற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தங்குமிடம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெள்ளப்பெருக்கு அண்டை நாடான கென்யாவையும் பாதித்ததுடன் அந்நாட்டிலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கென்யா நாட்டு உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 1,350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here