திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை விகாரையின் விகாராதிபதி, திருகோணமலை கல்யான வம்ச திஸ்ஸ தேரர் தாக்கல் செய்திருந்தார்.

மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்ப்பது மிகச் சிறந்தது என நீதியரசர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதற்கு இணங்க கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவும் ஆய்வின் முடிவின் அடிப்படையில் பொருத்தமான தீர்மானத்தை எடுக்க மனுதாரர் தரப்பு மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தனர்.

மேலும் வழக்கின் முன்னேற்ற அறிக்கையை டிசம்பர் 16 அன்று சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டப்பட்டுள்ளது.

ஆய்வு மற்றும் சட்ட நடைமுறைகள் முடியும் வரை அப்பகுதியில் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here