திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருக்கின்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 02.07.2024 அன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் கூடுகின்ற பாராளுமன்ற அமர்வின்போது அவர் சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் என செய்துகொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here