நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here