கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிரிகல அணைக்கட்டுக்கு அருகில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 75 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றைய தினம் (29.10) இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு உள்ளான நபர் வத்துபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கிரிந்திவெல காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








