கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (29.07) இரவு   பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறை ஒன்றில் 90 வயதுடைய ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here