மன்னார் மருதமடு திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திரு பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
திருவிழாவுக்கான முன் ஆயத்த கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இக் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்க.கனகேஸ்வரன் தலைமையிலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் பங்குபற்றுதலுடனும் நடைபெற்றது.









