மாளிகாவத்தை லக்ஹிரு செவன அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் நேற்று இரவு (22) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.








