Thursday, June 25, 2026
No menu items!

துப்பாக்கிப் பிரயோகம்

மஹரகம நாவின்னவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாணந்துறையில்  துப்பாக்கிச் சூடு!

பாணந்துறை தெற்கு வேகட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறிய ரக பாரவூர்தி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பாரவூர்தியில் இருந்த இருவரும் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளதாகத்...

அத்துமீறி பயணித்த பாரவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை பகுதியில் நேற்று (02) பிற்பகல் அத்துமீறி பயணித்த பாரவூர்தி மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற பாரவூர்தியை நிறுத்த காவல்துறையினர் பலமுறை சமிஞ்சை செய்த போதிலும், பாரவூர்தியை நிறுத்தாமல் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக காவல்துறையினர் குறித்த பாரவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில்...

சட்டவிரோதமாக மணல் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்..!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் இருந்து நேற்று (02/03/2025) காலை சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த வாகனத்தை...

காவல்துறையின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

உத்தரவை மீறி பயணித்த மகிழுந்தின் மீது மாலபே காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த வாகனத்திலிருந்து 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 30 வயதுடைய ஒரு ஆண் ஒருவரும், 33 வயதுடைய ஒரு பெண் ஒருவருமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 கேளிக்கை விடுதி அருகில் துப்பாக்கிச் சூடு….!

அமெரிக்காவின் அலபாமா மாகாணம், பர்மிங்கம் நகரிலுள்ள கேளிக்கை விடுதியொன்றில் நேற்று (22) துப்பக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடுதியின் அருகில் பலர் நின்று கொண்டிருந்த வேளை  திடீரென அங்கு காரில் வந்த கும்பலொன்று அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததோடு, 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை...

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

மாளிகாவத்தை லக்ஹிரு செவன அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் நேற்று இரவு (22) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

சகோதரருக்கிடையிலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று (16.09) இரவு 10.45 மணியளவில்  குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன் ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே  குறித்த...

இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்றைய தினம் (10.07.2024) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகம் எம்பிலிப்பிட்டியவில் கெல்ல ரக்வானா சாலையில் உள்ள கொலோனா பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த  அடையாளம் தெரியாத இருவரே  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேயிலைத் தோட்ட உரிமையாளரான...
- Advertisement -spot_img

Latest News

ரோஹித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) முன் ஆஜராகியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு...
- Advertisement -spot_img