Sunday, May 10, 2026
No menu items!

மாளிகாவத்தை

மாளிகாவத்தை பகுதியில் ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான கடத்தல் பொருட்கள் பறிமுதல் – நால்வர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக சுங்கச் செலுத்தாமல் நாட்டிற்குள் கடத்தப்பட்ட ரூ.10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மாளிகாவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் நால்வர் மாளிகாவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது...

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது!

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் தனியார் வாடகை வாகன சேவையின் ஓட்டுநர். கடந்த வாரத்தில் பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த தனியார் நிறுவனத்தின் முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்து அழைத்தபோது, அதன் ஓட்டுநர், செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசியில் அழைக்காமல், வேறு...

சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த  24 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பையில் 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 150...

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

மாளிகாவத்தை லக்ஹிரு செவன அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் நேற்று இரவு (22) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூரியர் சேவை மூலம் அனுப்பபட்ட பொதிகளில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கண்டுடிப்பிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவின் பொகோட்டாவிலிருந்து கம்பஹா கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொதிகளிலிருந்த மின் சாதனத்தில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருளே...

விழா மண்டபம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!!!

மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இன்று (17) காலை 10.10 மணி அளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த  தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும்,...

தொடர்மாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!

கொழும்பு, மாளிகாவத்தை லக்சித செவன அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் உள்ள லிப்ட்டின் ஓட்டையிலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலு, குறித்த நபர் குடியிருப்பில் தற்காலிக வதிவிடம் பெற்று, கூலி வேலை செய்து வந்த 36 வயதானவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். இறந்தவர் தற்காலிகமாகத் தங்கியிருந்த உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, ​​அடுக்குமாடி குடியிருப்பின்...
- Advertisement -spot_img

Latest News

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்...
- Advertisement -spot_img