அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல வாகனங்கள், காலி முகத்திடலுக்கு அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள், ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை ஒப்படைத்துள்ளதாகவும் அங்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here