பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நான்கு குற்றப்பத்திரிகைகளில் குற்றவாளி என கண்டறியப்பட்ட பொலிஸ் உப அத்தியட்சகர் ஒருவருக்கு 15 ஆண்டுகளுக்குள் அனுபவிக்க வேண்டிய வகையில் 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், முன்னர் வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து, குருணாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நான்கு தனித்தனி குற்றப்பத்திரிகைகளை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார, தீர்ப்பையும் தண்டனையையும் வழங்கினார்.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, நான்கு குற்றப்பத்திரிகைகளும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்குமாறு குற்றவாளிக்கு நீதிபதி உத்தரவிட்டார், அதை செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நான்கு குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 50,000 அபராதம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டது, அதை செலுத்த தவறினால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here