கொரியா குடியரசின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர்கள்) கீழ் இலங்கைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு வசதியளிக்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் 5–8 மாதங்கள் வரை விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலைக்குச் செல்ல வாய்ப்பு பெறுவார்கள்.
இதன் மூலம் வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்குக் கொண்டுவர முடியும்.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்படி, தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகுதிவாய்ந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்து விரைவில் தென் கொரியாவுக்கு அனுப்பும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த நோக்கத்திற்காக வேறு எந்த வெளி தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுக்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு கோசல விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.








