தெமட்டகொடை ‘களு பாலம்’ அருகில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வரும் போது உயிரிழந்துள்ளார்.
குறித்த சாரதி தனது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சற்று முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் காலியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்துடன், இந்த வருடத்தில் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது, இந்த சம்பவங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
(படம்;AI)








