தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்று (25) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கஹதுடுவ பகுதியிலுள்ள பஹலகம, கெதல்லோவிட பிரதேசத்தில் அமைந்திருந்த பாழடைந்த வீட்டை பொலிசார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சோதனையிட்டனர்.

அதில் பதுங்கி இருந்த சந்தேகநபர், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பொலிசார் மேற்கொண்ட எதிர்செயலின் போது சந்தேகநபர் காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில், விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேகநபரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here