தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலில் நாளையதினம் நடைபெறவுள்ள (18/01/2025) தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளது.


இன்று (1/17/2025)மதியம் கொழும்பிலிருந்து கடுகதி புகையிரதத்தில் யாழ்ப்பாணம் வந்தடைந்த குறித்த பிரதிநிதிகளை யாழ் புகையிரத நிலையத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பிரதிநிதிகள் வரவேற்றனர்.
தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்று கலை நிகழ்வுகள் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தேசிய தைப்பொங்கல் நிகழ்வு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்புடத்தக்கது.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








