அயல் வீட்டாரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

கங்கொடவில நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட நபரின் மனைவி அளித்த முறைப்பாட்டின் பேரில் கடந்த 10 ஆம் திகதி மிரிஹான காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here