“நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக கட்சிகள் தனித்தனியாக செயற்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஒன்றிணைந்து எங்களை வீழ்த்த முயற்சிக்கிறார்கள். அப்போதும் அவர்களின் இலக்கை அடைய முடியவில்லை என்றால் இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் எங்களை அவர்களால் எதற்காகவும் தோற்கடிக்க முடியாது” என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (29) இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான சகல சூழலும் உருவாகியுள்ளது. தற்போது எம்மால் தேர்தலை நடத்த முடியும். ஏப்ரலில் தேர்தலை நடத்தவே எதிர்பார்த்துள்ளோம்.








