ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் தங்களது பாதுகாப்பு வைப்புத் தொகையை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக 12.5% வாக்குகளைப் பெறாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம் 79% க்கும் அதிகமாக இருந்தது, இது 2019 தேர்தலில் 83% ஆக இருந்ததை விட சற்று குறைவு என ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.








