தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இருந்ததாக பொலிஸ் மா அதிபர் நிஹால் த்ல்துவ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக குறித்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்களே இத்தகைய பிரச்சாரங்களில் பங்கேற்க முடியாது எனக் கூறிய அவர், துண்டுப் பிரசுர விநியோகத்தில் பொன்னம்பலம் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.








