வடமாகாண ஆளுநரின் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரச காணி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்காக அரச உத்தியோகத்தர்களை அழைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நேற்று(08.10) செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் அரச காணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்காக வடமாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி தொடர்பான பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு காலம் நடைமுறையில் உள்ள நிலையில் இவ்வாறு அரச உத்தியோகத்தர்களை ஜனாதிபதியின் பிரதிநிதியான வடமாகாண ஆளுநர் அழைப்பது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here