யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகார தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்
நீதி அமைச்சர் ஹர்சண நாணயக்காரவின் பங்குபற்றலுடன் “தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டுக்குமான இயக்கத்தின் ஏற்பாட்டில்” யாழ். நாக விகாரையில் நேற்று(03) இடம்பெற்றுள்ளது.

நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, சர்வ மதத்தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
இருந்தபோதிலும் கலந்துரையாடலின் இடையே நீதி அமைச்சர் தேர்தலை காரணங்காட்டி பின்வழியால் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

(யாழ் நிருபர்-விஜயகுமார் லோஜன்)








