இந்தியாவில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது.

அஸ்ஸாமில் நடைபெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜசன் பெஹ்ரன்டோர்ப், கேன் ரிச்சர்ஸன் மற்றும் ஆரோன் ஹர்டீ ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.

223 என்ற இழக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய அணிக்கு கிளன் மெக்ஸ்வெல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ரவி பிஸ்னொய் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக கிளன் மெக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்.

2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) ராய்பூரில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here