நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

கடந்த மாதம் 05 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 22 கைதிகளும் 10 அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

அத்துடன் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் அதில் காயமடைந்ததாக அமைச்சர்,சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு  வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்டு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி இழப்பீடு வழங்கல், ஓய்வூதியம் வழங்கல், அதிகாரிகள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பிலும் அந்தக் குழுவின் மூலம் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.

மேலும் மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலை மற்றும் முழுமையான பாதிப்பு தொடர்பிலும் ஆராய்ந்து அதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது தொடர்பிலும் அந்தக் குழுவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here