ஊடக சேவை மூலமாகவும், வைத்தியசேவை மூலமாகவும் நாட்டுக்கும், மக்களுக்கும சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அவரது மறைவு பெரும் கவலையை தருகின்றது என்று கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
சாமி என்றழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமியின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரான தொழிலதிபர் சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி, வர்த்தகத்துக்கு அப்பால் சமூக மேம்பாட்டு நோக்கிலும் செயல்பட்டவர். சேவையாற்றியவர்.
தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஊடக பலத்தை பயன்படுத்தியது கிடையாது. இப்படியான ஒரு மனிதரின் மறைவு பெரும் கவலையளிக்கின்றது.
தொழிலதிபராக மாத்திரமல்லாது சமூக, ஆன்மீக பணிகளையும் ஆற்றியுள்ளார். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இளைப்பாறட்டும்.” – என்றுள்ளது.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








